அடி மேல் அடி வாங்கிய ரஷ்யா.. ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம்..

ரஷ்யா- உக்ரைன் போரானது  பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி சுமார் ஒன்றரை மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலகின் பல நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போரை நிறுத்தாமல் தொடர்ந்து உக்ரைனில் பல பேரை கொன்று குவித்து வருகிறது ரஷ்யா.  

இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற எதுவும் இறக்குமதி செய்ய மாட்டோம் என வெளிப்படையாக தெரிவித்தது. 

இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதை  படிப்படியாக குறைக்கப்படும் என்று ஜப்பான் வர்த்தக துறை அமைச்சர் கொய்ச்சி ஹகியுடா தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி ரஷ்யா -உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிருந்து ரஷ்யாவை  இடைநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போது உக்ரைனில் ரஷ்யா ராணுவ படைகள் கடும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் ஆளில்லா விமானத்திடம் மாட்டிக்கொண்டு உயிர் பிழைக்க தலைதெறிக்க ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

நைஜீரியாவில் 31 பேர் பலி..!! கிறிஸ்தவ தேவாலயத்தில் உணவிற்க்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!     

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் நெரிசல் ஏற்படுவதும் அந்த கூட்ட நெரிசலில்…