பெரிய அறையில் நடந்த கொடூரம் – இதற்கு தீர்வு தான் என்ன?

கடந்த ஒன்றரை மாதமாக ரஷ்யா உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரின் விளைவாக பல ஆயிரம் அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்ய இராணுவத்திற்கு பயந்து பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இந்நிலையில் போர் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒரு பள்ளியின்  அடித்தளத்தை அடைத்து வைத்திருந்தனர் ரஷ்ய ராணுவத்தினர். சுமார் 700 சதுர அடி கொண்ட அந்த அறையில் சிக்கிக்கொண்ட 300 அப்பாவி மக்களில் சிலர் பசியாலும், மூச்சுத்திணறலாலும் இறந்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளும், 50 சிறார்களும் ஒரு மாத காலமாக அந்த இருட்டு அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய படைகள் திடீரென கிராமத்திற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அங்கிருந்த மக்களை இழுத்துச் சென்று அந்த இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்ததாக முதியவர் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்ய படைகளால் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பசியால் உயிரிழந்தவர்களின் பெயர்களை அங்குள்ள சுவற்றில் எழுதி வைத்துள்ளதாகவும் கிராம நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.