உலக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த..!! இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர்..

இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச வை  எதிர்த்து மக்கள் தொடர்ந்து   போராட்டம்  நடத்தி வருகிறார்கள்.

மேலும் மகிந்த ராஜபட்ச அரசு பதவி விலக வலியுறுத்தி பெரும்பாலான இளைஞர்கள் அதிபர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக அதிபர் மாளிகை முன்பு இரவு, பகல் பாராமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. 

இந்நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா இலங்கையின் நிலையை சரிசெய்ய உலக தலைவர்கள்  எங்களுக்கு, உங்களுடைய அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது மக்களின் நியாயமான போராட்டம், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு விரைவில் சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆட்சியை கலைத்து விடுங்கள். நாங்கள் இந்த நிலைமையை சரி செய்ய அரசியலமைப்பு நடைமுறைகளின் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும்  பயன்படுத்தி சரி செய்கிறோம்.  இதற்காக உலக தலைவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் உயிர் இழப்பானது  கொரோனா தொற்றால் ஏற்பட்ட  மரணங்களை விட அதிகமாக  இருக்கப்போகிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….