ஐ.நா. தலைவரை கதி கலங்க செய்த ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதல்..!!

ரஷ்யா- உக்ரைன் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட பல நாட்டு தலைவர்களும் உக்ரைனுக்கு சென்று பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு அருகில் ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தியது பலருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் 10 பேர் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில்  ராக்கெட் தாக்குதலில் 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீவ் மேயர் விடாலி க்லிட்ஸ்கோ பேசுகையில் செவென் கோவ்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு தாக்குதல்கள் நடந்தன. இது கண்டிக்கத்தக்க படவேண்டியது என்றார்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தான் அன்டோனியோ குட்ரெஸ்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கே ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடந்தபோது ரஷ்ய ஏவுகணைகள் நகரை நாசம் செய்தனர். 5 ராக்கெட்டுகளை ரஷ்யா அடுத்தடுத்து அனுப்பியது. ஐ.நா.பொதுச் செயலாளர் வந்திருந்த வேளையில் நடந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த போர் கொடூரமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்தார். இந்த நிலையில் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *