ஜம்மு காஷ்மீரில் தொடரும் அட்டூழியம்.. !! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!!

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் என பாரபட்சமில்லாமல் பயங்கரவாதிகள் கொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் வங்கி அதிகாரி சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது மக்களிடேய பதற்றத்தை அதிகரித்துள்ளது.கடந்த மாதம் பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர் மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு போலீசாரையும் கொலை செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி  அதிர்ச்சி தகவல்!! | 300 terrorists waiting to infiltrate into Baramulla in  Jammu and Kashmir says military ...

அதே போல்  கடந்த வாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் சுடப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *