உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்ட புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்று தனது பதவியை  தக்க வைத்துக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி  மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரசுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த தேர்தலில் 48 தொகுதிகளிலும் பாஜகவும், 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி அவர்கள் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 

உத்தராகண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி | Pushkar  Singh Dhami set to return as Uttarakhand CM | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online ...

அவரை கட்சியின் முதல்வராக நியமித்த  நிலையில் அடுத்த ஆறு  மாத காலத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் சாம்பவாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காலியான அந்த தொகுதிக்கு பரபரப்பாக கடந்த 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் புஷ்கர் சிங் தாமி தனது முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *