சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைக்க கஷ்டப்பட்டேன்!

புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் அன்போடு இசைப்புயல் என அழைக்கப்பட்டு வருகிறார். இசை துறையில் சிறந்தும் மற்றும் உச்சத்தில் இருக்கும் இவர் தனது திரையுலக பயணத்தின் பொது பட்ட கஷ்டங்களை கூறுகிறார்.

மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரகுமான் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதையும் வென்று உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக உயர்ந்தார். ஏ.ஆர். ரகுமானுக்கு 2010-ம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷன் விரோதி வழங்கப்பட்டது. ரஜினிகாந்த்த் நடித்த முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் அளித்துள்ள பேட்டியில்,1990-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களுக்கு இசையமைத்தேன்.அது மிக கடினமான அனுபவமாக இருந்தது. மார்ச் மாதம் துவங்கும் படங்களை அந்த வருடம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வருவதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படும். நாட்கள் குறைவாக இருப்பதால் பின்னணி இசையையும், பாடல்களையும் விரைவில் முடித்து தரும்படி என்னை வற்புறுத்துவார்கள். அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதியில் எனது ஸ்டுடியோ இருந்ததால் ஜெனரேட்டர் உதவியுடன் பல இரவுகள் கடினமாக வேலை செய்தேன்.அந்த காலங்கள் நன்றாக வேதனையாக இருந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *