திருமணத்திற்கு தயாராக இருக்கும் கங்கனா ரனோட்!

இந்திய திரை பட நடிகையும், மாடலுமான நடிகை கங்கனா ரனோட், தமிழில் இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார்.

சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவதுகங்கனா ரனோட். இந்திய அரசு கங்கனாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது. இந்த நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரனோட் அறிவித்துள்ளார். வருகிற ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று கங்கனா ரணாவத்திடம் கேட்ட பொது, விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். வர இருக்கும் ஆண்டுகளில் குழைந்தைகள் பெற்று ஒரு தாயாக என்னை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த பிரத்தியேகமான ஆன் இருக்கிறாரா?என்று கேட்ட போது,’ ஆம் இருக்கிறார். அவரை பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும். என்றார். கங்கனா சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகளில் அவர் சந்தித்த பிரச்சனைகளை வேறு எந்த நடிகையும் சந்தித்திருக்க மாட்டார். சமீபத்தில் அவர் நடித்த தலைவி படம் தமிழ், இந்தியில் வெளியானது. இந்த படத்தில் மறந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *