பிக் பாசில் நுழையும் தளபதி விஜயின் தோழன்!

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் மூலம் டி.ஆர்.பி.யில் சாதனை படைத்தது வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5-வது சீசனை எட்டியுள்ளது. இதில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரியங்கா, இம்ம்மன் அண்ணாச்சி, பாவணி, நிரூப், ராஜு, அக்ஷரா, இசைவாணி, தாமரை, ஜக்கி பெர்ரி, அபினவ், வருண், மதுமிதா, அக்ஷரா என அனைவரும் தற்போது போட்டியில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை 50 நாட்கள் ஆனா பிறகு மீதும் ஒரு போட்டியாளரை பிக் பாஸ் விட்டிற்குள் அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்த சீனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்கு தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் போகவிருக்கிறார் என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் கதாநாயகனாகவும் தொகுப்பாளராகவும் மக்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தளபதி விஜயின் படங்களில் நண்பராக நடித்தது மட்டுமல்லாமல் விஜயின் நெருங்கிய தோழர் ஆகவும் இருக்கிறார்.கடைசியாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவருடைய நண்பர் கூட்டமும் இணைந்து நடித்ததில் சஞ்சீவ் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சஞ்சீவ் அளிக்கும் நேர்காணலில் தளபதி விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடிக்கடி பதிவிடுவது.

அத்துடன் இவர் குடும்ப நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்த சூழலில் சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால தளபதி ரசிகர்கள் இவருக்கு அமோக வரவேற்பை அளிப்பார்கள்.எனவே பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய உள்ள சஞ்சீவுடன் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டதாகவும், விரைவில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *