வலிமை ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகுமா?

இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிக் கபூரின் பே வியூ நிறுவனம் சார்பில் தயாரித்து இருந்தார். இந்தப் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளிவருதாக படக்குழு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்க்கு அதிக விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பொதுவாக திரையரங்குகளில் முதல் ஷோ 5 மணியளவில் திரையிடபடும். ஆனால் வலிமை திரைப்படத்திற்கு மிட் நைட் 1 மணிக்கு தொடங்க இருக்கதா சொல்லி இருக்காங்க. அப்படி 1 மணிக்கு முதல் காட்சி தொடங்குவது மூலம் , முதல் நாள் 8 ஷோ வரை திரையிட்டு, முதல் நாள் வசூல் 40 கோடி வரைக்கும் வசூலிப்பதாக திட்டமிட்டுள்ளதாக பல செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தான் அஜித் குமாரின் வலிமை படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது என்று டிவிட்டரில் பல செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *