வெளியானது தனுஷின் ‘தி கிரே மேன்’ படத்தின் அப்டேட்!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக பாலிவுட்டில் அட்ராங்கி ரே படம் ரிலீசானது. இந்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது தனுஷ் தெலுங்கில் உருவாகும் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தமிழில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் அவரது அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *