தளபதி ரசிகனாக மாறியா பாலிவுட் நடிகர் ஷாருகான்!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளர்ந்தவர் அட்லீ. இவர் எடுத்த நான்கு படங்களில் மூன்று படங்கள் தளபதி விஜயை வைத்து எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்று இயக்க உள்ளார்.

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படத்திற்கு ‘லயன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் தளபதி விஜயின் ‘பிஸ்ட்’ இன்னும் சில தினங்களில் திரைக்குவர உள்ளது. தளபதியின் பிஸ்ட் படத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தளபதி விஜயின் ரசிகனாக இயக்குனர் அட்லீ உடன் நானும் அமர்ந்திருக்கிறேன். எனது வாழ்த்துக்களை ‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு தெரிவிக்கிறேன் என்றும் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலர் அருமையாக உள்ளது என்று பிஸ்ட் பட பாடல் வரிகளை எழுதி தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தை கலக்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *