‘பீஸ்ட்’ படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று துவங்கியது!

தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தை டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ஜான் விஜய் போன்ற பலர் நடித்து இருக்கிறார்கள். இசை அனிருத் அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரும் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்து வந்தது. அது மட்டுமில்லாமல் 10 ஆண்டுகளுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் பிரொமோஷனுக்காக தளபதி விஜய் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அந்த நேர்காணல் வருகிற ஞாயிற்றுகிழமை அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இப்படி தொடர்ந்து ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மீண்டும் பீஸ்ட் படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகிறது. இன்று பீஸ்ட் படத்தின் டிக்கெட் புக்கிங்கை ஒரு சில திரையரங்குகளில் துவங்கி உள்ளனர். இதனால் தளபதி ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை புக் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *