விஜயுடன் கொஞ்சி விளையாடும் ராஷ்மிகா!

கன்னட நடிகை ரஷ்மிகா தனது நடிப்பு பயணத்தை 2016-ஆம் ஆண்டு ‘கிரீக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார். தொடர்ந்து பல கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் ரஷ்மிகா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் இந்தியா புழுவதும் பிரபலமானது.

ஒரே படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மீண்டும் விஜய் தேவரககொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் ரஷ்மிக்காவுக்கு நல்ல வரவேற்பை தந்தது. கியூட் ஆனா தனது நடிப்பின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை தன் வசமாக்கி வருகிறார் ராஷ்மிகா.

Image

கடைசியாக ரஷ்மிகா அல்லு அர்ஜூனுடன் இணைந்த ‘புஷ்பா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா நடனமாடிய ‘சாமி சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. ரஷ்மிக்கா தனது அடுத்த படத்தில் தளபதி விஜயுடன் நடிக்க உள்ளார். இவர் தமிழில் சுல்த்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி66 படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்று தளபதி-66 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்த பூஜை விழாவில் படத்தின் இயக்குனர் வம்சி, மற்றும் தயாரிப்பாளர், ரஷ்மிகா, விஜய், சரத்குமார், மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் எடுத்த புகைப்படம் அனைத்தும் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் ராஷ்மிகா மற்றும் தளபதி விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராஷ்மிகா தளபதியுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா தளபதியின் தீவிர ரசிகை என்று இதற்க்கு முன்பு பல நேர்காணலில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *