இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தமிழில் ஆதியுடன் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் நடித்து இருந்தார். இவர் இந்தி, பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மிதுன் சக்ரவர்திக்கு ஊட்டியில் பங்களா வீடு மற்றும் ஓட்டல்கள் உள்ளது.

இவருக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஊட்டிக்கு சென்று ஓய்வு எடுப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். கடைசியாக மிதுன் சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தார்.

மருத்துவமனையில் இவர் படுக்கையில் இருக்கும் புகைப்படம், வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன ஆனது என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகாக்ஷய் சக்கரவர்த்தி கூறும் போது, ‘எனது தந்தைக்கு காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சிறுநீரில் கல் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதற்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *