விரைவில் சன் நெக்ஸ்டில் ‘பீஸ்ட்’ திரைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

‘பீஸ்ட்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பீஸ்ட் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. ‘அரபிக் குத்து’, “ஜாலி ஓ ஜூம்காண’, ‘திரை தீ பிடிக்கும்’ பாடல்கள் பீஸ்ட் படத்தில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல்களின் லிரிகள் வீடியோ யூடியூபில் பல சாதனைகளை படைத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் “ஜாலி ஓ ஜூம்காண’ பாடலை யூடியூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளர். தற்போது தளபதி ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாக ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது. சன் நெக்ஸ்ட் ஆப்பில் வருகிற மே 11-ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *