விரைவில் சாய்பல்லவிக்கு திருமணம்!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. ஆனால் முன்பு மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி போனார். மலையாளம், தமிழ் மொழிகளை தாண்டி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார்.

தமிழில் மாரி-2,என்.ஜி.கே ஆகிய படங்களிலும், ‘பாவ கதைகள்’ எனும் வேப் தொடரிலும் நடித்தார். தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள ‘விராடபர்வம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் நடிகர் ஷிவா கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாராகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படங்களை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. மேலும் தேடி வரும் வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம். திருமணத்துக்கு தயாராகி வருவதால் புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. சாய் பல்லவி வீட்டில் விரைவில் திருமண நிகழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *