தம்பி இனிமேல் ஆன்லைன் எக்ஸாம்லா கிடையாது – இனி அனைத்து தேர்வுகளும் நேரடியாக தான் நடத்த வேண்டும் யுஜிசி அறிவிப்பு.!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றால்  நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த கொரோனா பெருந்தொற்றால் பல பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொற்றை  கட்டுப்படுத்த போடப்பட்ட பொது முடக்கத்தால்  மாணவர்களின் கல்வி பெரிதாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள் . இதனை சரி செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் பெரிதாக மகிழ்ச்சி அடைந்தனர். ஏனென்றால் ஆன்லைனில் தேர்வு நடை பெற்றால் மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து பதிலளிக்கலாம் என்ற ஒரு வசதி இருந்தது. பின்க் ஒருவன் ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து வேகமாக மக்கள் செலுத்தப்பட்டதால் கருணா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

        இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் திறந்த பின்பு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தேர்வுகள் இனிமேல் ஆன்லைனில் நடக்காது என்றும் இனி வரும் தேர்வுகள் அனைத்தும் நேரடி தேர்வாக தான் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வு நேரடியாகத்தான் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையை உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் நடத்தப்படாது என்றும் அதற்கு மாறாக இனி தேர்வுகள் அனைத்தும்  நேரடியாக தான்  நடைபெற  என்றும் தெரிவித்திருந்தது.  கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் யூ.ஜி.சி  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *