மதுக்கடை வருமானம் முன்னேற்ற பணிகளுக்கு செலவிடப்படும்… பாஜகவிற்கு பதிலடி கொடுத்த பகவந்த் மான்..!

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகந்வத் மான்சிங் டெல்லியில் உள்ள மதுக் கடைகளின் மூலம் வரும் வருமானம் அம்மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படும் என தெரிவித்துள்ளார். ஆளும் பாஜக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி அண்மையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தில் மது கடைகளை லாப நோக்கத்துடன் திறப்பதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் தற்போது பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தில் மிஷன் பஞ்சாப் 2022 என்ற முயற்சியின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் அவருக்கு மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர் கூறியதாவது, பாஜக அரசு டெல்லியில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் மட்டுமே உள்ளது. டெல்லி மாநிலத்தில் திறந்திருக்கும் மதுக் கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மாநிலத்தின் கட்டமைப்பு, பள்ளிகள் திறப்பது மற்றும் மின்சாரம் வழங்குவது போன்ற பொது பணிகளுக்காக செலவிடப்படும் என தெரிவித்தார். பாஜகவிற்கு எங்களிடம் கேள்வி கேட்பதை தவிர வேறு எதுவும் தெரியாது எனவும் விமர்சித்துள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லாப நோக்கத்திற்காக மட்டுமே மதுக்கடைகளை திறந்து வைத்து வருகிறார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *