எப்பயாவது தான் சாப்பிடனும் … எப்பயுமே சாப்பட கூடாது! – டோலோ 650 அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா, மக்களை  வாட்டி வதக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதம் கொரோனா முற்றிலும் அழிந்து விடும் என்று சொல்லி சொல்லி இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பும் கொரோனாவின் கோரதாண்டவம் குறைந்த பாடில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற ஒற்றை இலக்குடன் உலகின் பெரும்பாலான நாடுகள் பயணித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு வருட கொரோனா பொதுமுடக்கத்தில் சுமார் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இச்செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.இந்நிலையில்  டோலோ 650 மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து டாக்டர். செங்கோட்டையன் ஜோன்ஸ் கூறியுள்ளார். அதாவது, சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் முக்கிய மாத்திரை இது.

பல்வேறு பாராசிட்டமால் மாத்திரைகளில் Dolo-வும் ஒன்று. காய்ச்சலில் இருந்து வெளி வருவதற்கு இது உதவுகிறது என்றாலும் அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

அதுபோல கல்லீரலில் ஏற்கனவே பாதிப்பு இருப்பவர்கள் Dolo என்ற இந்த பாராசிட்டமாலை அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் எளிதில் பாதிப்பு அடையும். இது காய்ச்சலை தற்காலிகமாக குறைக்கிறதே தவிர முழுமையாக குணப்படுத்துவதில்லை.

கல்லீரல் பிரச்சினைகளை மட்டுமின்றி ரத்தசோகை, மஞ்சள் காமாலை, உடல் வீக்கம், சருமப் பிரச்சினைகள், தடிப்புகள், டயேரியா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *