பேரவையில் ஓபிஎஸால் எழுந்த சிரிப்பலை… நாசுக்காக பதிலளித்த அமைச்சர்!

OPS

சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கேள்விநேரத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வி பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

பேரவையில் இன்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் பேசும் போது, சேலம் கோழிக்கால் நத்தத்தில் இருந்து கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற சாலையில் உள்ள ரயில்வே கேட்டுக்களுக்கு சுரங்கப்பாதை போடப்பட்டுள்ளது. காஞ்சாம்புதூர் என்ற வைகுண்டத்தில் இருந்து அரை கிலோமீட்டருக்கு அருகில் மேட்டுக்காடு என்ற இடத்தில் முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்படாமலேயே உள்ளது. அதை அமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இது கோழிக்கால் நத்தம் வைகுண்டத்தை இணைக்கும் சாலை மட்டுமல்ல என்று சொன்ன அமைச்சர் எ.வ.வேலு, இது நாமக்கல் பகுதிகளில் இருந்து சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற சாலை என்று சொன்னார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும் எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார். திருச்செங்கோடு எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் சொன்ன அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர் கோரிக்கைகள் பற்றி ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேச எழுந்த எழுந்த ஓ.பன்னீர் செல்வம், சேலம் கோழிக்கால் நத்தம் வழியாக வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் ஈஸ்வரன் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறியிருக்கிறார். வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் முதலில் கிருஷ்ணபரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று அமைச்சர் பதில் தர வேண்டும் என்றும் கேட்டார். ஓபிஎஸ் கேட்ட கேள்வியால் அவைத்தலைவர் அப்பாவு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

பதில் கூற எழுந்த அமைச்சர் எ.வ.வேலுவும் சிரித்தபடியே, ஆன்மீகத்தில் திளைத்திருக்கிற அண்ணன் ஓபிஎஸ் வைகுண்டத்திற்கு எப்படி அனுமதிக்கப்படுமா என்று கேட்கிறார்கள். ஆன்மீகத்திற்கு என்றே போடப்பட்டுள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐந்தரை மணிக்கே வைகுண்டத்திற்கு வழிகாட்டுவார். சிவலோகத்திற்கு போவதாக இருந்தாலும் வைகுண்டத்திற்கு போவதாக இருந்தாலும் வழிகாட்டும் பணிகளில் சேகர்பாவு ஈடுபட்டுள்ளார் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். இந்த சம்பவத்தில் பேரவையில் சிரிப்பலை உருவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *