குடும்பத்துடன் துபாய் விசிட்; திடீர் டெல்லி பயணம்… இதெல்லாம் எதுக்கு?… கொளுத்தி போடும் எடப்பாடி!

ஓமலூரில் அதிமுக தொண்டர்களிடையே உரையாற்றிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் மற்றும் டெல்லி பயணம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பகுதிகளுக்குட்பட்ட கொங்கணாபுரம், எடப்பாடி மற்றும் ஓமலூரில்ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஓமாலூரில் கோடை கால தண்ணீர் மற்றும் நீர்மோட் பந்தலை திறந்து வைத்த பின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடையே ஆற்றிய உரையில் பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் எனது டெல்லி பயணம் குறித்து பேசி உள்ளார். அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் கேட்டு நிதிபெற்று திட்டங்களை தந்தார். நான் முதல்வராக இருந்தபோது டெல்லி பயணத்தை டெல்லிக்கு காவடி தூக்குவதாக பேசினார்.
இப்போது திமுக தலைவர் என்ன காவடி தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.

மத்திய அரசுடன் அதிமுக இனக்கமாக இருந்ததால் ஏராளமான நிதி பெற்று தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் தந்தோம். தமிழகத்தில் உள்ள மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
முதலமைச்சர. குடும்பமே துபாய் சென்றனர். தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்க சென்றாரா? அல்லது தனது குடும்பத்திற்கான தொழில் தொடங்க சென்றாரா? என்று மக்கள் கேட்கின்றனர்.

2021ம் ஆண்டு 10 மாதத்தில் சர்வதேச கண்காட்சி தொடங்கப்பட்டது. ஆனால் முடியும் தருவாயில்தான் தமிழக அரங்கை திறந்தது வேடிக்கையானது.
மத்திய அரசு கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால் டெல்லிக்கு ஓடி மத்திய அமைச்சர்களை பார்த்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்ததாக தங்கம் தென்னரசு கூறுகிறார். மத்திய அரசில் உள்ளவர்கள் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள்.
ஆனால் பிரதமர் தமிழகம் வந்தபோது கோபேக் மோடி என்று பலூண் பறக்கவிட்டார். அரசியல் நாகரீகம் தெரியாதவர் ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *