மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..!! என்ன செய்யப்போகிறார் ராகுல் காந்தி..?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரான ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினார்.இந்த நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு சில பத்திரிகைகளும் வெளியாகின.

இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வரை கடனாகக் கொடுத்து உதவியது. இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நேஷனல் ஹெரால்டு நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மூடப்பட்டது.

Sonia, Rahul Gandhi summoned by ED for questioning in money laundering case  | India News – India TV

அதன்பின் 2010ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகள் 50 லட்சம் ரூபாய்க்கு யங் இந்தியா என்ற  நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட போது அதில் முறைகேடு நடந்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.  

இந்நிலையில் இந்த வழக்கில் ராகுல் காந்தி நேற்று ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி ஆஜராக கோரி ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *