பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – கமலாலயக் கதறல்(தரமான ‘சம்பவம்’)

பள்ளிக்கூடத்தில் கலைஞர் football player. எதிரி கோல் போடுவதை எப்படித் தடுப்பது, எதிரிக்குப் போக்கு காட்டி-அசரடித்து, எப்படி கோல் போடுவது எல்லாமும் அவருக்குத் தெரியும். அரசியலிலும் அதேதான். அவருக்கு எதிரா அந்தக் காலத்திலேயே கோமான்கள் சீமான்கள்னு வந்தவனெல்லாம் ஃபுட்பால் மாதிரி அவர்கிட்டே உதை வாங்கிட்டுத்தான் போனான். நெருக்கடி நேரத்திலும் தேர்தலில் தோல்வி ஏற்பட்ட நேரங்களிலும் கழகத்தைக் காத்து நின்ற Goalkeeperம் அவருதான்.

“எவ்வளவோ பாத்துட்டோம்.. இதைப் பாக்கமாட்டோமா”ங்கிற தெம்புதான் கலைஞரோட கெத்து. அவரோட, ஸ்கூல் படிப்பு எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்டோடு முடிஞ்சு போச்சு. ஆனாலும், அதே கமலாலயக் குளத்தின் கரையோரமாத்தான் அவரோட நடமாட்டம் அதிகமா இருக்கும். அவருக்குன்னு ஒரு gang இருக்கும். அது பண்ணுற அலப்பறை, ஊரையே தெறிக்கவிடும்.

Dravidian stalwart, revered leader, passionate writer: Rare pictures of  Karunanidhi | The News Minute

திருவாரூர் தேர் அழகு. மன்னார்குடி மதில் அழகு. வேதாரண்யம் விளக்கு அழகுன்னு அந்தக் காலத்து ஆளுங்க சொல்லிக்கிட்டுருப்பாங்க. ஆழித்தேருங்கிற அம்மாம் பெரிய தேரை வடம் புடிச்சி இழுக்குறதுக்காக, பண்ணையாரு தன்னோட வயலில் வேலை செய்ற பதினெட்டுப் பட்டி ஆளுகளையெல்லாம் திரட்டிக்கிட்டு வந்திருப்பாரு. அவங்களுக்கு சோத்தைப் போட்டு, தேரை இழுக்கச் சொல்லுவாங்க. சரியா இழுக்கலைன்னா சாட்டையடி விழுந்த காலமும் உண்டு. அந்தக் காலத்திலேயே திருவாரூர் தேர்த் திருவிழா நேரத்தில் ‘சம்பவம்’ நடந்தது.

“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் உனக்கெதுக்கு தியாகேசா?“ அப்படின்னு ஊருல உள்ள சுவரில் எல்லாம் எழுதியிருந்தது. அதைப் பார்த்துட்டு, “அடப்பாவிகளா..” என்று அலறிய ஆளுங்களும் இருந்தாங்க. “நம்ம கஷ்டத்தைத்தாம்ப்பா எல்லாருக்கும் புரியுற மாதிரி, எவனோ நக்கலா எழுதியிருக்கான்”னு மனசுக்குள்ள ரசிச்ச விவசாயத் தொழிலாளர்களும் இருந்தாங்க. ஊரு முழுக்க உள்ள சுவரில் எல்லாம் அந்த ‘சம்பவ’த்தை செஞ்சது இந்த Gangதான்.

Karunanidhi and 'Tamilness': Kalaignar's literary, cultural legacy cannot  be separated from his politics-Politics News , Firstpost

தியாகேசர் கோவிலுக்குள் கிருபானந்தவாரியார் பக்தி சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார். கலைஞர் Gang வேடிக்கைப் பார்க்க வந்திருந்தது. வாரியார் சாமிகள் ஜீவகாருண்யம் (only vegetarian) பற்றிப் பேச்சிக்கிட்டிருந்தாரு. “உயிர்களைக் கொன்று, அதைச் சாப்பிடுவது பாவ காரியம்”னு சொன்னார். அவரைப் பார்த்து கலைஞர், “செடி, கொடிக்கெல்லாம் உயிரு இருக்குதா சாமி?”னு கேட்டாரு. குறுக்குக் கேள்வியை அவர் எதிர்பார்க்கலை. வில்லங்கம் பண்ணுறதுக்காகவே இந்தப் பொடியன் வந்திருக்கான்னு வாரியாருக்குப் புரிஞ்சிடிச்சி.

காணாமல் போன கனவுகள்: பாமரனின் உள்ளத்திலும் பரமனை விதைத்தவர் - திருமுருக கிருபானந்த  வாரியார்

“செடி கொடிக்கெல்லாம் உயிரு இருக்கு. அதனாலதான் அதை அழிக்காம, காயை மட்டும் பறிச்சி சமையல் செய்றோம்”னு சொன்னாரு. “கீரைத்தண்டை வேரோடு பிடுங்கிட்டு வந்துதானே சமைக்குறாங்க”னு கலைஞர் கேட்டதும், வாரியார் சாமிகள்கிட்ட பதில் இல்லை.

“நீ பெரிய ஆளா வருவே.. எம்பெருமான் முருகன் உன்னை ஆசிர்வதிப்பான்’னாரு. கோவிலில் இருந்த ஊரு பெரிய மனுசருங்க, “இவனுங்களை யாரு உள்ளே விட்டது”ன்னு அந்த Gangஐ விரட்டிட்டாங்க.

“வெவகாரமாத்தான் பேசுறான். ஆனா வெவரம் இருக்குய்யா” என்பதுதான் சின்ன வயது கலைஞரைப் பற்றி ஊரார் கால்குலேஷன். அவரோட கணக்கே தனி.

அப்பப்ப இந்தியைக் கட்டாயமா திணிக்க அரசாங்கம் நினைக்கிறதும், அதை எதிர்த்து பெரியார் கட்சிக்காரங்க போராட்டம் நடத்துறதும் வழக்கமா இருந்தது. கலைஞருக்குப் பிறகு, திருவாரூர் ஸ்கூலில் படிச்சிக்கிட்டிருந்த இரண்டு பேரு, அவங்க க்ளாஸ் ரூம் போர்டில் சாக்பீஸால் எழுதி எதிர்ப்பைக் காட்டுனாங்க. ஒரு ஸ்டூடன்ட் ‘இந்தி ஒழிக’னு எழுத, இன்னொரு ஸ்டூன்ட், ’தமிழ் வாழ்க’னு எழுத, இரண்டு பேரையும் வெளியே அனுப்பிச்சிட்டாரு இந்தி பண்டிட்.

Obituary: M. Karunanidhi , Dravidian stalwart - The Hindu

“உங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து, ஹெச்.எம்.மை பாருங்கடா. அப்புறம்தான் என் க்ளாசுக்கு வர முடியும்”னு பண்டிட் சொல்லிட்டாரு. வீட்டுல இதைப் போய் சொன்னால் இரண்டு பேருக்கும் செமத்தியா விழும். என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிக்கிட்டே, ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு கடையில் உட்கார்ந்திருந்த கலைஞர்கிட்ட போய் விவரத்தை சொன்னாங்க.

“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போக வேணாம். நேரா போய் ஹெச்.எம்.கிட்ட விவரத்தை சொல்லுங்க”னு ஐடியா கொடுத்து அனுப்பிட்டாரு. இரண்டு பேரும் ஹெச்.எம். ரூமில் போய் நின்னாங்க. அதுக்குள்ள அந்த இந்தி பண்டிட்டும் அங்கே வந்து, போர்டில் எழுதியதைப் பத்த வச்சிட்டாரு.

ஹெட்மாஸ்டரும் இந்தித் திணிப்புக்கு எதிரானவருதான். ஆனா, ஸ்கூல் ரூல்ஸ் இருக்குதே.. அதனால அந்த இரண்டு பேரையும் கையை நீட்டச் சொல்லி, பிரம்பால ஆளுக்கு அரை டஜன் அடி கொடுத்துட்டு, “உங்க உணர்வு எல்லாம் மனசுல இருக்கணும். போர்டுல எழுதக்கூடாது. ஒழுங்கா க்ளாசுக்குப் போய் படிங்க’னு சொல்லி அனுப்பிட்டாரு.

இரண்டு பேரும், ஸ்கூல் முடிஞ்சதும் மறுபடியும் வந்து கலைஞரைப் பார்த்தாங்க. “என்ன சொன்னாரு ஹெட்மாஸ்டரு?”னு கலைஞர் கேட்க, “உணர்வையெல்லாம் மனசிலே வச்சிக்கிட்டு, ஒழுங்கா படிக்கணும்னு ஹெச்.எம். சொன்னாரு”னு இரண்டு பேரும் பதில் சொன்னாங்க.

அவர்களைப் பார்த்த கலைஞர் “இதையேதான் அண்ணாவும் என்கிட்டே சொன்னாரு” என்றார் சிரித்தபடியே.

கலைஞர் சிறுவயதில் எழுதிய ‘இளமைப் பலி’ என்ற படைப்பு, அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் வெளிவந்தது. தன் பேரு பிரிண்ட் ஆனதைப் பார்த்தும் கலைஞருக்குப் பெருமை தாங்கலை. எல்லாருகிட்டேயும் காட்டுறாரு. திருவாரூருக்கு நபிகள் நாயகம் விழாவில் கலந்துக்க வந்த அண்ணா, “யாரு இந்த ஊருல மு.கருணாநிதி”னு கேட்டு, அழைச்சிட்டு வரச் சொன்னாரு. சின்னப் பையனா இருக்கிறதைப் பார்த்ததும், “நல்லா எழுதுறே.. ஆனா அதை அப்புறம் செய்யலாம். இப்ப ஒழுங்கா படி”னு சொல்லிட்டாரு. கலைஞர் இதை எதிர்பார்க்கலை.

CN Annadurai: How a Schoolteacher Became Tamil Nadu's First Political  Stalwart

அவரைப் பொறுத்தவரைக்கும், அவர் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரு. அண்ணா பேச்சையும் கேட்கலை. எழுதிக்கிட்டுத்தான் இருந்தாரு. ச்சும்மா.. அதிர விடுற மாதிரி எழுதுறதுதான் அவரோட ஸ்டைலு.

இப்பவும் ஒரு கூட்டத்துக்கு பெரியாருன்னு சொன்னா stomach burn ஆகும். Gelusilக்கும் அது அடங்காது. வலி தாங்க முடியாதவன் பினாத்துற மாதிரி, ‘ஈ.வெ.ரா.. ஈ.வெ.ரா’னு கத்தும் கதறும். அந்தக் கூட்டத்துக்கு அப்பவே stomach burn மட்டுமல்ல, அதுக்கு கீழேயும் எரிச்சலை உண்டாக்குற வேலையைத் திருவாரூரில் கலைஞர் கச்சிதமா செஞ்சிக்கிட்டே இருந்தாரு.

‘மாணவர்நேசன்’னு கையெழுத்துப் பத்திரிகை நடத்திய கலைஞர், அதற்கப்புறம் ‘முரசொலி’ துண்டறிக்கையை அச்சிட்டு வெளியிட்டாரு. அவரோட புனைப் பெயரு, சேரன்.

சோஷியல் மீடியாவில் fake Idக்கு ஆட்டின் ?♥ விடுற பசங்க மாதிரி, புனைப் பெயரில் கலைஞர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்ப செம fans club.

முரசொலியில் தேதி, ஆண்டு போட வேண்டிய இடத்தில் ‘ஈ.வெ.ரா ஆண்டு 67’ அப்படின்னு போட்டு, பெரியாரோட வயதைக் குறிப்பிட்டிருப்பாரு.

“நாம கலியுக வருஷம்னு கணக்கு சொன்னா, இந்தப் பொடியன் ஈ.வெ.ரா. ஆண்டுங்குறானேன்னு stomach burning பார்ட்டிகளுக்கு முன்னாடியும் பின்னாடியும் எரிய ஆரம்பிச்சிடிச்சி. கலைஞர் cool captainனா தொடர்ந்து சம்பவம் பண்ணிக்கிட்டே இருந்தாரு.

(அலப்பறை தொடரும்)

(ஊடகவியலாளர் கோவி. லெனின் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *