வார்னர் Vs உமேஷ் ! ஸீ…சா…விளையாட்டு !

டெல்லி கேப்பிட்டஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய KKR அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆரம்பம் முதலே மந்தமாக ஆடிய கொல்கத்தா அணியின் ரன்கள் உயர ஸ்ரேயஸ் ஆடிய
அல்டிமேட் ஆட்டம் உதவியது. அவருக்கு பின் நிதிஷ் ராணாவின் அதிரடி ஆட்டமும் ஓரளவு நல்ல ஸ்கோருக்கு வழி வகுக்க, 147 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டார்கள்.

போன ஆட்டத்தில் வம்பிழுத்து அபராதம் கட்டி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் டெல்லி அணியின் ஆட்டம் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது. நிதானமாக ஆடிய அணியின் நம்பிக்கையை உமேஷ் யாதவ் தன் சிறப்பான ஆட்டத்தால் அசைத்துப் பார்த்தார். ஒரு பக்கம் சீராக விக்கெட் சரிய, இன்னொரு பக்கம் வார்னர் வெடி வெடித்துக் கொண்டிருந்தார். அவரால் அணியின் ஸ்கோர் வெற்றியை நோக்கி நகர… அவருக்கு கடிவாளம் கட்ட முடியாமல் பெளலர்கள் திணற … ஆட்டம் ஸீ… சா விளையாட்டு போல இரண்டு பக்கம் ஆடிக்கொண்டிருந்தது. வார்னரின் விககெட்டை உமேஷ் வீழ்த்தினாலும் ஸ்கோர் கணிசமாக உயர்ந்து இருந்தது.

அடுத்து வந்த ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டத்தால். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆட்டத்தை வென்றனர். லீக் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் லக்னோவ் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *