விமானம் பழுது: 98 பயணிகளுடன் தவிப்பு!!

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 98 பயணிகளுடன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

நேற்றிரவு 9.45 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது 98 பயணிகள் மற்றும் பைலெட் உள்ளிட்ட 6 பேர் என மொத்தம் 104 பேர் இருந்தனர். இந்நிலையில் 104 நபர்களுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது.

இதனை பைலெட் கண்டறிந்த நிலையில் உடனடியாக விமானத்தை ஓடும் ரன்வேயில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இழுவை வாகனத்தின் மூலம் விமானத்தின் நிறுத்தும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமானத்தின் இன்ஜினை சரிசெய்ய இரவு 2 மணி அளவில் போராடியும் சரிசெய்ய முடியவில்லை.

இந்த சூழலில் விமான பயணிகளை விமான தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது 15 மணி நேரம் ஆகியும் விமானத்தை சரிசெய்யப் படாததால் வெளியூர் செல்லும் பயணிகள் அங்கேயே தங்கி உள்ளதால் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சில பயணிகள் தங்களின் சொந்த வசிப்பிடம் சென்னையில் இருப்பதால் அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். மேலும், இன்ஜின் பழுது ஏற்பட்ட நிலையில் விமான பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *