நமக்கு இது நடக்காம போய்டுச்சே …. 5 மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும்?

தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு 1 மாதத்திற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. மே மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே நிலைமை இப்படி என்றால் மே மாதத்தில் வெயிலின் தாக்கத்தை குறித்து நினைக்கும் போது உடல் பதைபதைக்கிறது. இதில் பள்ளிக்கு செல்லும் மாண்வர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தில் தான் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்படும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத்திலே வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு… தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *