இந்திய ரூபாய் நோட்டுகளில் இனி முக்கிய தலைவர்களின் படம் – ரிசர்வ் வங்கி

இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் மட்டுமே இடம் பெற்று இருந்த நிலையில் இனி வரும் காலங்களில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள் புகைப்படம் இடம்பெறும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இனி ரிசர்வ் வங்கி அச்சிடும் ரூபாய் நோட்டுகளில் பிற முக்கிய நபர்களின் முகங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

அதன்படி இந்த நோட்டுகளில் இரவீந்திரநாத் தாகூர் மற்றும் APJ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைக் கொண்ட புதிய சீரியல் ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக மத்திய நிதி அமைச்சகம் மற்றும்  இந்திய ரிசர்வ் வங்கி  தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் எனப் பல அடையாளங்களை கொண்ட ரவீந்திரநாத் தாகூர் மற்றும் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரை  அச்சிட மத்திய அரசிடம் பரிசீலித்து வருகிறது.

RN Tagore Photo will be In Bank Notes: The Reserve Bank is on the path to  big steps LNU News | LNU News

இந்த செயலுக்கு அமெரிக்க டாலர் நோட்டில் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றோரின் உருவப்படங்களை கொண்டுள்ளன. அதேபோல் இந்தியாவில் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது என கூறியுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும் காந்தி, தாகூர் மற்றும் கலாம் கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *