பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பருக்கு ஏற்பட்ட பக்கவாத நோய்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! 

கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பருக்கு  அரிய வகை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மோசமான உடல்நல கோளாறு காரணமாக முகத்தின் ஒரு பாதியைச் செயலிழக்கச் செய்யும் அரிய வகை பக்கவாத நோய் ஏற்பட்டு  பாடகர் ஜஸ்டின் பெய்பர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பக்கவாத நோய் காரணமாக ஜஸ்டின் பெய்பரின் முகத்தின் ஒரு பகுதி முகம் செயலிழந்துள்ளது. ஜஸ்டின் பெய்பர் ராம்சே ஹன்ட் என்ற ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் விரைவில் நடைபெற இருந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்.

பிரபல பாப் பாடகருக்கு நேர்ந்த துயரம்! முகம் செயலிழந்து வெளியிட்ட காட்சி -  மனிதன்

முகத்தில் இருக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது. இதனால் முகத்தில் குறிப்பிட்ட பகுதிகள் செயல் இழக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக ஜஸ்டின் பெய்பர் வெளியிட்டுள்ள வீடியோவில் அடுத்தடுத்து நான் எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்வதால் எனது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளது எனக்குப் புரிகிறது. நான் உடல் ரீதியான இப்போது இசைக் கச்சேரிகளை நடத்த முடியாத நிலையில் உள்ளேன்.

எனக்கு இப்போது மிகவும் சோர்வாக இருக்கிறது. முகத்தின் வலது பக்கத்தை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் முழுவதும் முடங்கி உள்ளது. அதற்காக இப்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். நான் இதில் இருந்து எப்போது குணமடைவேன் என எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *