அமேசானுடன் கைகோர்க்குமா அப்போல்லோ??

தற்போதுள்ள நவீன உலகத்தில் மனிதர்கள் பொருளைத் தேடி செல்வது குறைந்து விட்டது. எந்த பொருளாக இருந்தாலும் ஆர்டர் செய்த ஓரிரு நாட்களில் வீட்டின் வாசலுக்கு முன் வந்து விடுகிறது. கண் மை முதல் காலணி வரை எதுவாக இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம். இதற்கு உடல் உழைப்பு தேவை இல்லாததால் மக்கள் இதனை பெரிதும் வரவேற்கின்றனர்.


இந்நிலையில் உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் இதன் வளர்ச்சி அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், ஈபே என அனைத்து இந்திய முன்னணி நிறுவங்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளது . அமேசான்-இன் இந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எளிதான அணுகுமுறை, எக்கச்சக்க பிராண்டுகள் மற்றும் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதே ஆகும்.


மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.’ரிலையன்ஸ் மற்றும் டாடா’ நிறுவனங்கள், இந்த பிரிவில் ஏற்கனவே நுழைந்துவிட்ட நிலையில், அமேசான் நிறுவனமும் முயற்சியை துவக்கி உள்ளது.இதற்கிடையே, ‘அப்பல்லோ ஹெல்த்’ நிறுவனம் மருந்து வணிகத்துக்காக, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் கூட்டு வைக்கும் முயற்சியில் இறங்கிய நிலையில், அமேசான் அந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி செய்து வருகிறது.மேலும், அப்பல்லோ நிறுவனம், அதன் மருந்து வணிகத்தின் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 3,750 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும், அமேசான் நிறுவனம், அப்பல்லோ ஹெல்த் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டம் எதுவும் வைத்துள்ளதா என்பது தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *